ஆஷஸ் ஐந்தாவது போட்டி விறுவிறுப்பு! இங்கிலாந்து பேட்டிங்!

13 September 2019 விளையாட்டு
ashes5thtest.jpg

இதுவரை நடந்து முடிந்துள்ளப் போட்டிகளில், 2-1 என்ற கணக்கில், ஆஸ்திரேலிய அணி முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இந்தப் போட்டியில் எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், ஆஷஸ் தொடரின் ஐந்தாவதுப் போட்டியில், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகின்றது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்ட் போட்டி, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சினைத் தேர்வு செய்தது. இதனை முன்னிட்டு, இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தொடங்கியது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி, எட்டு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் வீரர்கள் ராய் பர்ன்ஸ் 47(87), ஜோ டென்லி 14(26), அணியின் கேப்டன் ஜோ ரூட் 57(141), பென் ஸ்டோக்ஸ் 20(36), ஜானி பேர்ஸ்டோ 22(55), ஜோஸ் பட்லர் 64(84), சாம் குர்ரான் 15(13), கிரிஸ் வோக்ஸ் 2(5), ஜோப்ரா ஆர்ச்சர் 9(16) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பட்லர் மற்றும் லீச் ஆகியோர் ஆட்மிழக்காமல் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா அணியின் சார்பில், மிச்சல் மார்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹாசல்வுட் மற்றும் கும்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

HOT NEWS