அருவம் திரைவிமர்சனம்!

15 October 2019 சினிமா
aruvam.jpg

சித்தார்த், கேத்ரின் தெரசா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் அருவம். படத்தின் பெயரிலேயே, படத்தின் கதையை வைத்துள்ளனர் என்பது வரவேற்கத்தக்கது.

சித்தார்த், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியாக வருகிறார். அவர் நேர்மையாகவும், பொறுப்பாகவும் நடக்கும் நல்ல மனிதர். உணவில் நடக்கும் கலப்படங்களை கண்டு அதிர்கிறார். பொங்குகிறார். கேத்ரின் தெரசா ஒரு பள்ளி ஆசிரியை. பிறவியிலேயே, அவருடைய மூக்கினால், நுகர முடியாது. அவரைப் பார்த்ததும் பிடித்துவிடுகிறது நாயகனுக்கு. அவ்வளவு தான் காதல், வில்லனிடம் மோதல், சமூகக் கருத்து என, படம் செல்கின்றது.

இப்படத்தின் மிகப் பெரிய டிவிஸ்டே, இதிலும் பேய் உள்ளது. அதையும், சரியாகப் பயன்படுத்தி உள்ளனர். அது எதற்காக வருகிறது. எப்படி, கேத்ரினுக்கு நுகரும் திறன் வருகின்றது, கலப்படங்களை சித்தார்த் தடுத்தாரா இல்லையா, என்பது தான் அருவம் படத்தின் கதை.

உணவில் எப்படியெல்லாம் கலப்படம் செய்கின்றார் என, மிகத் தெளிவாகவும், நேர்த்தியாகவும், பாமரனுக்கும் புரியும் விதத்தில் காண்பித்து அதிர்ச்சி அளிக்கின்றார்கள். கடைகளுக்குச் சென்று, பொருட்கள் வாங்கும் பொழுது படத்தின் காட்சிகளே நமக்கு ஞாபகம் வருகின்றது. வில்லன் இப்படத்திற்கு எதற்கு வந்தார், அவரை ஹீரோ எப்படி பழி வாங்கினார், என்பது போன்ற காட்சிகளை நீக்கியிருந்தால், படம் நல்லதொரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் படமாக மாறியிருக்கும்.

ரேட்டிங் 2/5

HOT NEWS