லீக்கானது அர்னாபின் வாட்ஸ் ஆப் உரையாடலா? வைரலாகும் தகவல்கள்!

17 January 2021 அரசியல்
arnabwhatsapp.jpg

ரிபப்ளிக் டிவி உரிமையாளரும், செய்தியாளருமான அர்னாப் கோஸ்வாமிக்கும் பார்க் முன்னாள் முதன்மை செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற வாட்ஸ்ஆப் உரையாடல் லீக்காகி உள்ளது.

மீடியாவில் நாளுக்கு நாள் பல சேனல்கள் வந்து கொண்டே இருக்கின்ற நிலையில், வட இந்தியாவின் பெரிய மீடியா ஆளுமையாக இருப்பவர் அர்னாப் கோஸ்வாமி. அவர் தலைமையில் ரிபப்ளிக் டிவி என்ற சேனல் இயங்கி வருகின்றது. அந்த சேனல் ஆரம்பித்தக் காலத்தில் இருந்தே, மோடிக்கும் பாஜக அரசிற்கும் ஆதரவு தெரிவித்து வருவதாக பலக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.

இந்த சூழலில், அர்னாப் ஒரு நபரின் தற்கொலையினைத் தூண்டிவிட்டார் எனக் கூறி, அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் வெளி வந்தார். இந்த சூழலில், அவருடைய டிவி சேனலானது டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டதாக, மஹாராஷ்டிரா மாநில காவல் ஆணையர் தெரிவித்தார். இந்த வழக்கானது, தற்பொழுது நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தற்பொழுது புதிய குண்டினை அர்னாப் மீது போட்டுள்ளார்.

இந்தியாவின் பார்க் எனப்படும் டிஆர்பி அளவிடும் அமைப்பின் முன்னாள் சிஇஓ பார்தோ தேஸ்குப்தாவுடன், அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்ஆப்பில் பேசியுள்ளார். அதில், இந்திய இராணுவ வீரர்கள் 40 பேர் பலியானது, தாக்கப்பட்டது உள்ளிட்டப் பல விஷயங்களை அவர்கள் பேசியிருக்கின்றனர். அத்துடன், 2017ம் ஆண்டு துவங்கிய இந்த ரிபப்ளிக் டிவி சேனலை டிஆர்பியில் உயர்த்துவதற்காக பெருமளவில் லஞ்சம் வழங்கியிருப்பதும் உறுதியாகி உள்ளது.

இந்த சூழலில், இது குறித்து பேசியுள்ள மும்பை காவல்துறை, அவர் லஞ்சம் வழங்கி இருப்பதும், டிஆர்பி விஷயத்தில் ஊழல் செய்துள்ளது வெளிப்பட்டு உள்ளது எனவும், டிஆர்பி ஊழலுக்கான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன எனவும் கூறியுள்ளது. இது தற்பொழுது தேசிய ஊடகங்களில் பேசு பொருளாகி உள்ளன.

HOT NEWS