விஜய் படத்தில் இருந்து விலகிய முருதாஸ்! காரணம் இதுதானா?

24 October 2020 சினிமா
armurugadoss.jpg

நடிகர் விஜய் நடிக்கும் விஜய்65 படத்தில் இருந்து, இயக்குநர் ஏஆர் முருகதாஸ் விலகி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படமானது, ஊரடங்கு காரணமாக, இன்னும் வெளியாகாமல் உள்ளது. திரையறங்குகள் திறக்கப்பட்டதும், இப்படம் வெளியாவது குறித்தத் தகவல்கள் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவின்கின்றன. இந்த சூழ்நிலையில், விஜயின் அடுத்தப் படத்தினை இயக்கப் போவது யார் என, பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தப் படத்தினை, சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே நடைபெற்று முடிந்து விட்டன. இந்தப் படத்தினை இயக்குவதற்காக, முதலில் சுதா கொங்கரா பேசப்பட்டார். இருப்பினும், படத்திற்கான வேலைகள் ஆரம்பிக்க நேரமாகும் என்றுக் கூறி விட்டு, அவரே விலகவிட்டார். இந்த சூழ்நிலையில், வெற்றிமாறன் விஜயிடம் கதை சொல்லியிருந்தார்.

அவரும், சூர்யா நடிக்கும் வாடிவாசல் மற்றும் நடிகர் சூரி நடிக்கும் பெயரிடப்படாத படத்தினை இயக்க உள்ளதால், விஜயினை வருங்காலத்தில் இயக்கும் வாய்ப்புகளே உள்ளன. இந்த சூழ்நிலையில், இயக்குநர் மகிழ்திருமேனி விஜயிடம் சென்று கதை கூறியிருக்கின்றார். அதற்கு விஜயும் ஓகே சொல்லிவிட்டாராம். இருப்பினும், உதயநிதியினை இயக்குவதில் தற்பொழுது, மகிழ்திருமேனி பிஸியாகி விட்டார்.

இந்த சூழ்நிலையில், விஜயினை வைத்து, துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்ளிட்டத் திரைப்படங்களை இயக்கிய ஏஆர் முருதாஸ் விஜயினை சந்தித்து அரசியல் கதையினைக் கூறியிருக்கின்றார். அதனை ஏற்றுக் கொண்ட விஜய், அதன் முழுக் கதையினையும் கொண்டு வரச் சொல்லியிருக்கின்றார். இந்த சூழ்நிலையில், அந்தப் படத்தின் கதையினை சன் பிக்சர்ஸிடம் கொடுத்துள்ளார் விஜய். படத்தின் கதையானது தமிழக அரசியலை அடிப்படையாகக் கொண்டது என்பதால், காட்சிகளை மாற்ற தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. அதனை ஏற்க, முருகதாஸ் விஜயிடம் கூறிவிட்டு இந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். விரைவில் விஜயின் அடுத்தப் பட இயக்குநர் குறித்தத் தகவல்கள் வெளியாகும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS