பால்வெளியுடன் மோத உள்ள ஆண்ட்ரோமேடா அண்டம்!

12 October 2019 தொழில்நுட்பம்
andromeda.jpg

இன்னும் 400 கோடி ஆண்டுகளில், நாம் வாழும் இந்த பால்வளி அண்டமானது, ஆண்ட்ரோமேடா என்ற அண்டத்துடன் மோத உள்ளது.

சிட்னியில் உள்ள சிட்னி இன்ஸ்ட்டிடியூட் ஃபார் அஸ்ட்ராநமி அண்ட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த, ஜெரியண்ட் லீவிஸ் கூறுகையில், நாம் வாழும் அண்டத்திற்கு பால்வெளி அண்டம் என்று பெயர். அதே போல், பல அண்டங்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன. அப்படி இந்த பிரபஞ்சத்தில், நம் அண்டத்திற்கு மிக அருகில் ஆண்ட்ரோமேடா அண்டம் உள்ளது.

அந்த அண்டம், நம்முடைய பால்வெளி அண்டத்தினை விட சுமார், 20 மடங்கு பெரியது. அந்த அண்டம் உருவாக சுமார் 10 பில்லியன் ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இருக்கலாம் என்றார். மேலும் அவர் கூறுகையில், இந்த ஆண்டோரமேடா அண்டமானது, 4 பில்லியன் ஆண்டுகள் கழித்து, நாம் வாழும் இந்த பால்வெளி அண்டத்துடன் மோதி, இரண்டும் ஒன்றாகும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

HOT NEWS