ஜனவரி 14 சென்னை வரும் அமித் ஷா! பாஜக முதல்வர் வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு?

04 January 2021 அரசியல்
amitshahspeech.jpg

வருகின்ற ஜனவரி 14ம் தேதி அன்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்க வருகைத் தர உள்ளார்.

கடந்த மாதம், சென்னை வந்திருந்த அமித் ஷாவிற்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசாங்க விழாவில் கலந்து கொண்ட அவர், முதலமைச்சரையும் தமிழக மக்களையும் பாராட்டிப் பேசினார். அப்பொழுது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸூம், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்ஸூம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தொடரும் என முழங்கினர். இருப்பினும், பாஜக தரப்பில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த சூழலில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என பாஜ காத்திருந்தது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காதக் காரணத்தால், அதிமுகவுடன் கூட்டணியில் இருப்பதை உறுதிபடுத்தி வருகின்றது. இந்நிலையில், வருகின்ற பொங்கலன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகின்றார். அவர் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் கலந்து கொள்கின்றார். அத்துடன் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்தும் விசாரிக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கூட்டணிக் குறித்தும், தேர்தலில் கூட்டணி முதல்வர் வேட்பாளர் குறித்தும் முடிவினை தெரிவிக்க உள்ளார் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS