துப்பாக்கிச் சுடுதலில் அஜித் குமார் சாதனை!

16 October 2019 சினிமா
ajithshooting.jpg

நடிகர் அஜித் குமார், தற்பொழுது, தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில், 9ம் இடம் பிடித்தார்.

நேர்கொண்ட பார்வைப் படத்திற்குப் பிறகு, தல அஜித்குமார் இளைப்பாறுவதற்காக, துப்பாக்கிச் சுடும் போட்டியில் விருப்பம் காட்டி வந்தார். தமிழகத்தில் நடைபெற்ற போட்டியில், வென்ற அவர் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்குபெற்றார்.

இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில், பிஜி4-எஸ்பிஎம் என்ற பிரிவில் 200 புள்ளிகள் பெற்று 9ம் இடத்தினைப் பிடித்தார். இதில் முதல் சுற்றில் 101 புள்ளிகளையும், இரண்டாவது சுற்றில் 99 புள்ளிகளையும் பெற்று அசத்தினார். இதில், யோகேந்திர மிட்டல் 273 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார்.

மற்றொரு பிரிவான பிஜி4-எஸ்டிஎம் பிரிவில், 195 புள்ளிகளுடன் 15ம் இடத்தினைப் பிடித்தார். மூன்று சுற்றுகள் கொண்ட இப்பிரிவில், முறையே, 75, 63, 57 எனப் புள்ளிகளைப் பெற்றார். இதில், வினீத் சோலாங்கி 264 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார்.

மற்ற வீரர்கள் இதற்காகப் பிரத்யேகப் பயிற்சிகளைப் பெற்று, தொடர்ந்து பல வருடங்களாக முயற்சி செய்து நல்ல புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், வெறும் பொழுது போக்கிற்காக கலந்து கொண்டப் போட்டிகளில், இவ்வளவு குறைந்த காலத்தில், சாதித்துள்ளார் அஜித். இதனை அவருடைய ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS