தல 60 அதிகாரப்பூர்வ அறவிப்பு வெளியானது! ஆகஸ்ட் மாதம் சூட்டிங் ஆரம்பம்!

30 July 2019 சினிமா
agalaathey.jpg

தமிழ்நாடு துப்பாக்கி சுடுவோர் சங்கம் நடத்திய, துப்பாக்கி நடத்தும் போட்டி, கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அஜித் குமார், வெற்றி பெற்று அசத்தி உள்ளார்.

ஒவ்வொரு படத்தின் இடைவெளியிலும், தன்னுடை திறமையை வளர்த்துக் கொள்ளும் அஜித் தற்பொழுது, துப்பாக்கிச் சுடுதலில் ஆர்வம் காட்டி வருகிறார். பைக் ரேசிங், கார் ரேசிங், டிரோன் டிசைனிங், ஏரோ மாடலிங் என வலம் வந்த அஜித், தற்பொழுது துப்பாக்கியும் கையுமாக சுற்றிக் கொண்டு இருக்கிறார்.

சென்னை ஐஐடி மாணவர்களுடன் இணைந்து, தக்ஷா அணியின் மூலம், ஏரோ மாடலிங்கில் உலகளவில் பங்குபெற்று, எட்டாம் இடம் பிடித்த அஜித், தற்பொழுது துப்பாக்கி சுடுதலில் வெற்றி பெற்று அடுத்தக் கட்டப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். அடுத்தக் கட்டப் போட்டி டிசம்பர் மாதம், மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில் நடைபெற உள்ளது.

இந்த வெற்றியின் மூலம், இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள முதல் தமிழ் நடிகர் என்றப் பெருமையை நடிகர் அஜித் பெற்றுள்ளார்.

HOT NEWS