அதிமுக முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது! தொண்டர்கள் குஷி!

06 October 2020 அரசியல்
aiadmkcmcandidate.jpg

அஇஅதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தற்பொழுது அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அஇஅதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்று பல வாரங்களாக, உள்கட்சி விவகாரம் சூடுபிடித்து இருந்தது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர், மாறி மாறி தங்கள் தலைவரே அடுத்த முதல்வர் என போஸ்டர் ஒட்டினர். இதனிடையே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தங்களுடைய ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன், தங்களுடைய வீட்டில் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், இன்று காலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

அவர்களை வழி நெடுக நின்று கொண்டிருந்த ஆதரவாளர்கள், உற்சாகமாக ஆடி பாடி வரவேற்றனர். இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசினர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இருப்பார் எனவும் கூறினர். மேலும், அதிமுகவின் துணை முதல்வர் வேட்பாளராக ஓ பன்னீர் செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருப்பார்கள் எனக் கூறியுள்ளனர்.

இதனை தற்பொழுது அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS