நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி!

16 January 2020 சினிமா
jayashree.jpg

வம்சம் தொடரின் மூலம் பிரபலமான, நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்துள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

தனது கணவர் ஈஸ்வர் மற்றும் சீரியல் நடிகை மஹாலட்சுமி இருவருக்கும் இடையில், இரகசிய உறவு இருப்பதாக பரபரப்பு புகாரினை வெளியிட்டார் நடிகை ஜெயஸ்ரீ. மேலும், தன்னுடைய கணவரும், அவருடைய தாயாரும் இணைந்து கொண்டு, என்னைக் கொடுமைப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இது குறித்து, சென்னை காவல் ஆணையரிடம் புகாரும் அளித்தார். இதனிடையே, திடீரென்று, யாரும் எதிர்பாராத விதத்தில் நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்டு, தற்பொழுது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

HOT NEWS