ராகவா லாரன்ஸ் தம்பி மீது நடிகை புகார்! வற்புறுத்துவதாக கதறல்!

13 March 2020 சினிமா
lawrencebrother.jpg

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில், முன்னணி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். சினிமாவில் நடன இயக்குநராக இருந்து, தன்னுடையக் கடின உழைப்பால் படிப்படியாக நடிகராக உயர்ந்தவர். காஞ்சனா பட வரிசைகளின் வெற்றியினால், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர்.

இவர் தன்னுடைய அறக்கட்டளை மூலம், ஏழை எளியவர்கள், ஊனமுற்றவர்கள், குழந்தைகள், முதியவர்கள் எனப் பலருக்கும் தன்னால் இயன்ற உதவியினைச் செய்து வருகின்றார். அவருடையத் தம்பி எல்வின் எனும் வினோத். இவரினை, காஞ்சனா படத்தின் பாடல்களில் பார்த்திருப்போம். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், அவர் விரைவில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

அவரும் நன்றாக நடனம் ஆடுவார். அவருக்கும், தெலுங்குத் திரை உலகினைச் சேர்ந்த துணை நடிகை ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அது பின்னர் காதலாக மாறியுள்ளது. ஆனால், அதனை அந்த நடிகை ஏற்க மறுத்துவிட்டார். அவரை எல்வின், காதல் தொல்லை செய்வதாக போலீஸில் புகார் அளித்தார். ஆனால், எல்வின் தன்னுடைய செல்வாக்கினைப் பயன்படுத்தி, புகார் கொடுத்த என்னை சிறையில் அடைத்து விட்டதாகவும், சிறைக்குள்ளேயே கொலை முயற்சியும் நடந்தது எனப் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளார்.

இது தற்பொழுது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, நடிகை ஸ்ரீரெட்டி விவகாரத்தில், ராகவா லாரன்ஸ் மீது பழிசுமத்தப்பட்டது. இந்நிலையில், அவர் தம்பி மீதும் இப்படிப் பழி சுமத்தப்பட்டது.

HOT NEWS