சூர்யாவின் அருவா! ஹரி இயக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு!

02 March 2020 சினிமா
aruvaa.jpg

இயக்குநர் ஹரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

நடிகர் சூர்யா ஹரி இயக்கத்தில் சிங்கம், சிங்கம்-2 மற்றும் சிங்கம்-3 என்ற படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது, சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில், தன்னுடைய அடுத்தப் படத்தில் நடிப்பதற்கான, கதையினை தீவிரமாக ஆலோசித்து வந்தார்.

நடிகர் சூர்யாவும், இயக்குநர் சிறுத்தை சிவாவும் இணைந்து ஒரு படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவாவிற்கு ரஜினியினை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால், அந்தப் படத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில், தற்பொழுது சூர்யாவினை இயக்கும் வாய்ப்பினை இயக்குநர் ஹரி பெற்றுள்ளார். ஹரி சொன்ன கதையானது, சூர்யாவிற்குப் பிடித்துவிட்டதால், அதற்கு சூர்யா ஒப்புக் கொண்டாராம்.

இந்தப் படத்தின் பெயர் நேற்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மார்ச் ஒன்றாம் தேதி அன்று சூர்யா நடிக்கும் அடுத்தப் படத்தின் பெயரானது, அருவா என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்கின்றார். இது, சூர்யாவும், இமானும் இணையும் முதல் படமாகும். இது, ஆக்சன், சென்டிமென்ட், காதல் கலந்த படமாக உருவாக்கப்பட உள்ளது என, கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS