பாரதிராஜா இளையராஜா இணையும் ஆத்தா படம் கைவிடப்பட்டது!

04 January 2021 சினிமா
bharatiraja.jpg

பாரதிராஜா மற்றும் இளையராஜா இணையும் ஆத்தா திரைப்படமானது, கைவிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவாக இருந்த திரைப்படம் ஆத்தா. இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் அனைத்தும் கொரோனா ஊரடங்குக் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, இந்தப் படத்தின் சூட்டிங் மட்டுமின்றி, இந்தப் படத்தினையும் கைவிடுவதாக, பாரதிராஜா அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் அறிக்கையும் வெளியிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் இனிய தமிழ் மக்களே. 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால் உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம்.

காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும்,தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால்,ஆத்தா கைவிடப்படுகிறது.

புதிய அறிவிப்பு ,புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன். மிக விரைவில் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS