8ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

19 June 2020 சினிமா
rajinikanthspeech1.jpg

ரஜினியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, 8ம் வகுப்பு படிக்கும் சிறுவனைப் போலீசார் கண்டுபிடித்தனர்.

நேற்று (18-06-2020) சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு, திடீரென்று போலீசார் வந்து குவிந்தனர். சென்னைக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு, மர்ம போன் கால் ஒன்று வந்துள்ளது. அதில், ரஜினியின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் முடிந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள் எனவும் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்தின் வீட்டிற்கு மோப்பநாயுடன் சென்ற போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அங்கு எவ்வித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது வெறும் புரளி என்றுக் கண்டறிந்தனர். இதனிடையே, போன் செய்த அந்த மர்ம நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

அவர்கள் தேடுதலில் கடலூர் மாவட்டத்தினைச் சேர்ந்த எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவன், தன்னுடைய போனிலிருந்து அவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நெல்லிக்குப்பத்தினைச் சேர்ந்த அந்த மாணவன், தன்னுடைய போனில் இருந்து யாருக்கும் போன் போகவில்லை எனவும், எனவே 108 எண்ணிற்கு போன் செய்து, அவ்வாறு பேசியதாகவும் கூறியுள்ளான்.

அவன் மனநலம் பாதிக்கப்பட்ட பையன் என, தற்பொழுது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் அந்த மிரட்டலை நிராகரித்தனர். திடீரென்று, சிறுவன் ரஜினிக்கு போன் செய்து இவ்வாறு மிரட்டல் விடுத்து இருப்பது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS