உலக மக்கள் தொகை 790 கோடி! பேஸ்புக்கில் இருந்த நீக்கப்பட்டுள்ள ஃபேக் அக்கவுண்ட்கள் 540 கோடி!

15 November 2019 தொழில்நுட்பம்
facebook.jpg

உலகளவில் நம்பர் ஒன் சமூக வலைதளமாக, பேஸ்புக் உள்ளது. இதனை நிறுவிய மார்க் சூகர்பெர்க் உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். காலையில் எழுவது தொடங்கி, இரவு உறங்குவது வரை, பெரும்பாலானோரின் வாழ்க்கையே இந்த பேஸ்புக்கில் தான் கழிகின்றது என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.

இதில் உண்மையான கணக்குகளை விடை, பொய்யான கணக்குகளே அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவைகளை நீக்கும் பணிகளில், தற்பொழுது பேஸ்புக் நிறுவனம் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதுவரை உலகளவில், இந்த ஆண்டு மட்டும் சுமார் 540 கோடி போலியான பேஸ்புக் கணக்குகளை நீக்கியுள்ளது பேஸ்புக். கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் மட்டும், சுமார் 200 கோடி பொய் கணக்குகளை நீக்கியுள்ளது. பின், மார்ச் முதல் ஜூன் வரை 150 கோடி கணக்குகளையும், ஜூலை முதல் செப்டம்பர் வரை 170 கோடி கணக்குகளையும் நீக்கியுள்ளது.

உலக மக்கள் தொகையின் அளவே 790 கோடி என சர்வதேச மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், பேஸ்புக்கில் மட்டும் 540 கோடி போலியான அக்கவுண்டுகள் இருப்பது அதிர்ச்சி கலந்த விஷயமாகப் பார்க்கப்படுகின்றது.

HOT NEWS