3வது உலகப் போர் அபாயம்! எச்சரிக்கை விடுத்துள்ள இங்கிலாந்து தலைமை தளபதி!

09 November 2020 அரசியல்
worldwar3.jpg

உலகளவில் நிலவி வருகின்ற அசாத்திய சூழ்நிலையானது, விரைவில் 3வது உலகப் போருக்கு வழி கோலும் அபாயம் இருப்பதாக, இங்கிலாந்து தலைமை தளபதி ஜெனரல் நிக் கார்டர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியிருக்கின்ற சூழலில், இங்கிலாந்து முப்படைகளின் தலைமை தளபதியான ஜெனரல் நிக் கார்டர், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார். அவர் பேசுகையில், உலகம் முழுவதும் எல்லைப் பிரச்சனை, பொருளாதார சீர்குலைவு, அமைதியின்மை, ஆக்கிரமிப்பு உள்ளிட்டப் பலப் பிரச்சனைகள் நீடித்து வருகின்றன. நாம் தற்பொழுது நிச்சயமற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றோம். இது கடுமையானப் பாதுகாப்பு நெருக்கடியினை உருவாக்கி உள்ளது.

தற்பொழுது உலகளவில் பல இடங்களில் நடைபெற்று வருகின்ற மோதல்கள், விரைவில் போராக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது மிகப் பெரிய ஆபத்தாகும். வரலாற்றினை நாம் மறந்து விடக் கூடாது. கடந்த நூற்றாண்டினை நாம் பார்க்கும் பொழுது, இரு உலகப் போர்கள் நிகழ்ந்துள்ளன. அது போன்ற ஒன்றினை நாம் மீண்டும் பார்த்து விடக் கூடாது. 3ம் உலகப் போர் ஏற்படுமா எனக் கேட்டால், அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்று கூறுவேன். நாம் தான் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS