இந்திய விவசாய போராட்டத்திற்கு 36 இங்கிலாந்து எம்பிக்கள் ஆதரவு!

08 December 2020 அரசியல்
delhifarmersfood.jpg

இந்தியாவில் விவசாயிகள் செய்து வருகின்ற போராட்டத்திற்கு, இங்கிலாந்து நாட்டின் 36 எம்பிக்கள், தற்பொழுது தங்களுடைய ஆதரவினைத் தெரிவித்து உள்ளார்கள்.

இங்கிலாந்து நாட்டின் 36 வெவ்வேறு கட்சியினை சேர்ந்த எம்பிக்கள் பலரும், தற்பொழுது இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் டோமினிக் ராப்பினை அழைத்து அவருக்கு கடிதம் வழங்கியுள்ளனர். அதில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரை, விவசாயிகள் போராட்டம் சார்பாக பேசக் கூறியுள்ளனர். இது குறித்து பிரிட்டனில் வாழ்ந்து வருகின்றவும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான தன்மன்ஜீத் சிங் தேசி, தன்னுடையக் கையொப்பத்துடன் கூடிய கடிதத்தினை வழங்கி உள்ளார்.

அவருடன் இணைந்து, பிரிட்டனில் வாழ்ந்து வருகின்ற இந்தியாவினைப் பிறப்பிடமாகக் கொண்ட சீக்கியர்களும் கடிதம் வழங்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, இது குறித்து இந்தியாவுடன் பேசப்படும் என வெளியுறவுத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

HOT NEWS