2000 ரூபாய் நோட்டு நிறுத்தமா? மத்திய அரசு விளக்கம்!

20 September 2020 அரசியல்
2000.jpg

இந்தியாவில் கடந்த ஆண்டு 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் விளக்கமளித்து உள்ளார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படவில்லை என, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிக்கையின் மூலம் தகவல் வெளியிட்டது. இதனையடுத்து, 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு உள்ளது என, பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து, மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்து உள்ளார்.

அவர் பேசுகையில், கடந்த 2019ம் ஆண்டு 32,910 லட்ச இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டன. ஆனால் கடந்த மார்ச் 31ம் தேதியின் பொழுது, 27,398 லட்சம் என்ற எண்ணிக்கையில் தான் 2,000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 5 லட்சம் என அளவில் அச்சடிப்பது குறைந்துள்ளது. தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவி வருகின்ற காரணத்தால், இந்த பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது.

தற்பொழுது அது தொடங்கி உள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியை நிறுத்த மத்திய அரசு கூறவில்லை. அது நிறுத்தப்படவும் செய்யாது எனக் கூறியுள்ளார்.

HOT NEWS